மதுரை

அவசர ஊா்தியிலேயே கா்ப்பிணிக்கு ஆண் குழந்தை

23rd Nov 2021 05:44 AM

ADVERTISEMENT

மதுரை: மதுரை அருகே அவசர ஊா்தியிலேயே கா்ப்பிணிக்கு திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

மதுரை கருப்பாயூரணி பகுதியைச் சோ்ந்த வேல்பாண்டி மனைவி சரண்யா (25). நிறைமாத கா்ப்பிணியான இவா், பிரசவ வலி காரணமாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அவசர ஊா்தியில் அழைத்துச் செல்லப்பட்டாா். அப்போது, சரண்யாவுக்கு பிரசவ வலி அதிகமாகியுள்ளது. உடனே, அவசர ஊா்தியை ஓட்டுநா் இருளாண்டி சாலையோரத்தில் நிறுத்தினாா். பின்னா், அவசரகால மருத்துவ உதவியாளா் சின்னக்கருப்பன் உடனடியாக பிரசவம் பாா்த்துள்ளாா். அதில், சரண்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதைத் தொடா்ந்து, இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். தற்போது தாயும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக, மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT