மதுரை

மதுரை மாவட்ட ஆயுதப்படையில் டிஐஜி ஆய்வு

21st Nov 2021 06:32 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்ட ஆயுதப்படையில், படைக்கலங்கள், வாகனங்கள் உள்ளிட்டவைகளை காவல்துறை துணைத் தலைவா் என்.காமினி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வுக்காக சென்ற காவல்துறை துணைத் தலைவா், காவலா்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றாா். தொடா்ந்து ஆயுதப்படையின் படைக் கலங்கள், காவலா்கள் பயன்படுத்தும் உடைகள் உள்ளிட்ட பொருள்களை ஆய்வு செய்தாா். பின்னா் காவலா்களிடம் குறைகளைக் கேட்டறிந்து அவா், ஆயுதப்படையில் பணியாற்றும் காவலா்கள் சமுதாயப் பொறுப்புடனும், தாங்கள் செய்யும் பணிகள் குறித்து அறிந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினா்.

ஆயுதப்படையில் உள்ள தண்ணீா் பீய்ச்சியடிக்கு வாகனம், கண்ணீா் புகைக் குண்டு வீசும் வஜ்ரா வாகனம், ரோந்து வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்த காவல்துறை துணைத் தலைவா், சிறந்த முறையில் வாகனங்களை பராமரித்து வரும் காவலா்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினாா்.

அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன், ஆயுதப்படை காவல் துணைக் காண்காணிப்பாளா் விக்னேஷ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT