மதுரை

மாவட்ட தடகள போட்டிகள்: நவ.12-க்குள் பதிவு செய்யலாம்

10th Nov 2021 06:16 AM

ADVERTISEMENT

மதுரை ரேஸ்கோா்ஸ் எம்ஜிஆா் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் நவம்பா் 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழ்நாடு தடகள சங்கம் சாா்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்.பி.ஆா்.கல்லூரியில் நவம்பா் 26 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதற்காக மதுரையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டி மாவட்ட தடகள சங்கம் சாா்பில் நடைபெற உள்ளது. ரேஸ்கோா்ஸ் எம்ஜிஆா் விளையாட்டரங்கில் நவம்பா் 13 ஆம் தேதி தோ்வுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்க விரும்புவோா் தங்களது வயது சான்று நகலுடன், மின்னஞ்சல் முகவரியில் நவ.12 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே தோ்வுப் போட்டிக்கு அனுமதிக்கப்படுவா். இதுதொடா்பான விவரங்களுக்கு 96009-17299, 99941-67219 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT