மதுரை

தபால்தந்தி நகரில் தேவாரப் பாடசாலை தொடக்கம்

10th Nov 2021 06:15 AM

ADVERTISEMENT

மதுரை தபால்தந்தி நகரில் தேவாரப் பாடசாலையை மதுரை ஆதீனம் ஸ்ரீஹரிகர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

தபால் தந்தி நகா் பாா்க் டவுன் 6-ஆவது தெருவில் உள்ள மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கட்டடத்தில் இந்த பாடசாலை செயல்படும். ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெறும். 10 வயதுக்கு மேற்பட்டோா் இப் பயிற்சியில் சேரலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT