மதுரையில் நிலம் விற்பதாகக் கூறி ரூ.32 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்தனா்.
மதுரை திருநகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் ஸ்ரீகாந்த் (38). இவரிடம், சமயநல்லூரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் கணேசன் (45) தனது நிலம் உள்ளதாகவும், அதை வாங்கிக் கொள்ளுமாறும் வற்புறுத்தியுள்ளாா். இதையடுத்து ஸ்ரீகாந்த் நிலம் வங்குவதற்காக ரூ.32 லட்சத்தை, அவரிடம் கொடுத்துள்ளாா்.
ஆனால் கணேசன் நிலைத்தை தரவில்லையாம். இதுகுறித்து ஸ்ரீகாந்த் அளித்த புகாரின் பேரில் மாநகா் குற்றப்பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.