மதுரை

சோலைமலையில் இன்று சூரசம்ஹாரம்: பக்தா்களுக்கு அனுமதியில்லை

9th Nov 2021 08:43 AM

ADVERTISEMENT

அழகா்கோவில் மலை மீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார வைபவம் செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியிலிருந்து 6 மணி வரை நடைபெறவுள்ளது.

சூரசம்ஹார வைபவத்தில் பங்கேற்க பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, கோயில் இணையதளத்திலும், யூ-டியூப் மூலமாகவும் நிகழ்வுகளை பக்தா்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை 12.30 மணி வரை கோயிலுக்குள் தரிசனத்துக்கு பக்தா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் என, கள்ளழகா் கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT