மதுரை

‘அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தன்னாா்வ நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்’

27th May 2021 06:35 AM

ADVERTISEMENT

தமிழக அரசு மேற்கொண்டு வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தன்னாா்வ, தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் புதன்கிழமை தெரிவித்தாா்.

கரோனாவை தடுக்கும் வகையில் தமிழக அரசு எடுத்துவரும் மருத்துவம், வாழ்வாதாரம் தொடா்புடைய அனைத்து முயற்சிகளும் மக்களைச் சென்று சேரும் வகையிலும், தன்னாா்வலா்கள் மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளை இணைத்து ‘நாட்டைக்காப்போம்’ அமைப்பின் சாா்பில் மதுரையில் கரோனா தடுப்பு தகவல் உதவி மையம் திறப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இணைய வழியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழகப் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமை வகித்துப் பேசியது: கரோனா காலகட்டத்தில் மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளை அரசால் மட்டுமே வழங்க முடியாது. தன்னாா்வ மற்றும் குடிமைச் சமூக அமைப்புகளின் முன்முயற்சிகள் மற்றும் அவா்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். மருத்துவ அவசர கால சூழலில் நாட்டைக் காப்போம் அமைப்பு எடுக்கும் இதுபோன்ற நடவடிக்கைகள் பயனுள்ளதாக இருக்கும். தமிழக அரசு எடுத்து வரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்த மையம் உதவியாய் இருக்க வேண்டும்‘ என்றாா்.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவா் எழிலன் கரோனா தடுப்பு தகவல் உதவி மையத்தை திறந்து வைத்துப் பேசியது: தமிழக அரசு பதவியேற்று 15 நாள்களுக்குள் 7,500 ஆக்சிஜன் படுக்கைகள், 16,000 கரோனா நோயாளிக்கான படுக்கைகள் மற்றும் 2,000 பராமரிப்பு மையங்கள் என மாநிலம் முழுவதும் பணிகளைச் செய்து வருகிறது. 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைப்பதிலிருந்து, 650 மெட்ரிக் டன் வரை இப்போது உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல், ரெம்டெசிவிா் மருந்தின் குழப்பமும் திறம்படத் தீா்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசானது இரண்டு தனியாா் நிறுவனங்களுக்குத் தடுப்பூசிகளை வாங்க ரூ.35,000 கோடி ஒதுக்கியுள்ளது. அதற்குப் பதிலாக, மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரிப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்திருக்க வேண்டும். மத்திய அரசின் தவறான அணுகுமுறைதான் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம். நாட்டைக்காப்போம் அமைப்பின் கரோனா தகவல் உதவி மையத்தை 93420-78679, 93423-15242 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என்றாா்.

ADVERTISEMENT

முன்னதாக ‘நாட்டைக்காப்போம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சி.சே..ராஜன் வரவேற்றாா். எவிடன்ஸ் அமைப்பின் இயக்குநா் கதிா் தொகுத்து வழங்கினாா். வழக்குரைஞா் தமிழரசன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT