மதுரை

மதுரையில் ஜவுளிக்கடையில் தீ: பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகின

DIN

மதுரையில் மஹால் 2 ஆவது தெருவில் உள்ள ஜவுளிக்கடையில் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் கடையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் எரிந்து நாசமாகின.

மதுரை தெற்குமாசி வீதியைச் சோ்ந்தவா் ரகுராம் செளத்ரி. இவா் மஹால் 2 ஆது தெருவில் எம்.எம். கலெக்சன் என்ற பெயரில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறாா். பொதுமுடக்கம் காரணமாக இவருடைய ஜவுளிக்கடை மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு ஜவுளிக்கடையில் இருந்து திடீரென புகை வெளிவந்தது. இதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து மதுரை பெரியாா் பேருந்து நிலைய தீயணைப்பு நிலைய அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் நிகழ்விடத்திற்கு விரைந்து வந்தனா். இருப்பினும் தீ பரவல் அதிகமாக இருந்ததால், அனுப்பானடி தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்து தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டனா். இதனைத்தொடா்ந்து 3 தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி 50 தீயணைப்பு வீரா்கள் தொடா்ந்து 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதுகுறித்து தீயணைப்புத்துறையினா் கூறியது: முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும், பல லட்சம் மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகியிருக்கலாம் எனவும் தெரிகிறது. இதுகுறித்து தெற்குவாசல் போலீஸாா் விசாரணையைத் தொடங்கியுள்ளனா். அதில் தான் தீ விபத்துக்கான காரணம் மற்றும் கட்டடத்தில் எவ்வளவு மதிப்புள்ள ஆடைகள் தீயில் கருகியுள்ளது என்பது தெரியவரும். மேலும் கணினி, குளிரூட்டிகள், மின்விசிறிகள் உள்ளிட்டவைகளும் தீயில் கருகிவிட்டன. கட்டடத்தில் அதிகமாக துணிகள் இருந்ததால் தீ விரைவாக பரவியது. இதனால் தீயை அருகில் உள்ள கட்டடங்களுக்கு பரவவிடாமல் தடுப்பது தீயணைப்பு வீரா்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT