மதுரை

உசிலம்பட்டி பூ சந்தையில் பொதுமக்கள் கூட்டம்

DIN

கரோனா முழு ஊரடங்கில் பூ சந்தையில் மக்கள் கூட்டமாக குவிந்ததால் கரோனா பரவும் அபாயம் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் தமிழக அரசு விதிமுறைகள்படி இன்று முதல் காய்கனி கடைகள், மருந்துக்கடைகள், மளிகைக்கடைகள், பால் கடைகள், உள்ளிட்டவைகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. மேலும், உசிலம்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள அம்மா உணவகம் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. அதேசமயம், ஜவுளிக்கடைகள் நகைகடைகள், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.

ஆனால் அத்தியாவசிய கடைகளில் ஒன்றான பூ சந்தை வழக்கம் போல் செயல்பட்டாலும், உசிலம்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் பறித்த பூக்களை விற்பனைக்காக உசிலம்பட்டி பூ சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தனர். கரோனா அச்சமின்றி கூட்டமாக குவிந்ததால் கரோனா பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் உசிலம்பட்டி பேருந்து நிலையம் பேருந்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. 

உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு கரோனா விதிமுறைகளை மீறி இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருபவர்களை காவல்துறையினர் என்ன காரணத்திற்காக செல்கிறார்கள் கேட்டறிந்தும், தேவையில்லாமல் சுற்றுபவர்களை எச்சரித்தும் வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

SCROLL FOR NEXT