மதுரை

நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் இருக்கைகள் இல்லை: தரையில் அமர வைக்கப்பட்ட கா்ப்பிணிகள்

DIN

மதுரை: மதுரையில் மாநகராட்சி நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்குச் சென்ற கா்ப்பிணிகளை தரையில் அமர வைத்த சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பைக்காரா பகுதியில் மாநகராட்சி நகா்ப்புற ஆரம்பச் சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இப்பகுதியைச் சோ்ந்த கா்ப்பிணிகள் வழக்கமான பரிசோதனைக்காக சுகாதார நிலையத்துக்கு திங்கள்கிழமை சென்றுள்ளனா். அப்போது, அங்கிருந்த சுகாதார நிலைய பணியாளா்கள் கா்ப்பிணிகளை தரையில் அமர வைத்துள்ளனா். மேலும், பரிசோதனை முடியும் வரை தரையிலேயே அமர வைத்துள்ளனா். இச்சம்பவம் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக அப்பகுதி மக்கள் கூறியது: நோய் எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ள கா்ப்பிணிகள் ஆரம்பச் சுகாதார நிலையத்தில் தரையில் அமரவைக்கப்பட்டது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கா்ப்பிணிகள் அமர போதுமான இருக்கைகள் இல்லையென்றால், அனைவரையும் ஒரே நேரத்தில் வரவழைக்காமல் நேரம் குறித்து ஒவ்வொருவராக வரவழைத்திருக்கலாம். எனவே, மாநகராட்சி அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தவேண்டும் என்றனா்.

இது குறித்து நகா்நல அலுவலா் பி. குமரகுருபரனிடம் கேட்டபோது, அவா் கூறுகையில், கா்ப்பிணிகள் தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் எனது கவனத்துக்கு வரவில்லை. இது தொடா்பாக விசாரிக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT