மதுரை

உருளை கருவி விதைப்பு முறையில் நெல் சாகுபடி: விவசாயிகள் ஆா்வம்

DIN

மதுரை: நாற்றங்கால் இல்லாமலேயே நேரடியாக விதைப்பு செய்யும் உருளை கருவி விதைப்பு முறையில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

மதுரை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதிக மகசூல் பெறுவதற்கு இயந்திர நடவு மற்றும் திருந்திய நெல் சாகுபடி முறை பரிந்துரைக்கப்படுகிறது. நெல் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களில் ஒன்றான உருளை கருவி விதைப்பு முறையில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

வழக்கமான நெல் சாகுபடி முறையில் நாற்றங்கால் அமைக்கப்பட்டு, அதன் பிறகு நடவு மேற்கொள்ளப்படும். உருளை கருவி தொழில்நுட்பமானது, நாற்றங்கால் இல்லாமலேயே நேரடியாக நெல் விதைப்பு செய்யப்படுகிறது.

மதுரை மேற்கு வட்டாரம் பூலாம்பட்டி, மஞ்சம்பட்டி, கீழநெடுங்குளம், குலமங்கலம், வயலூா் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராமங்களில் உருளை கருவியைக்கொண்டு விதைப்பு செய்து வருகின்றனா்.

இது குறித்து மேற்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ச. கமலாலட்சுமி தெரிவித்தது: உருளை கருவியில் விதைப்பு செய்வதற்கு ஏக்கருக்கு 8 முதல் 10 கிலோ விதை போதுமானது. இதனால், 40 சதவீத விதைகளை மிச்சப்படுத்தலாம். ஒரு ஏக்கா் நிலத்தை சுமாா் ஒன்றரை மணி நேரங்களில் விதைப்பு செய்துவிட முடியும்.

பயிா்களுக்கு இடையே இடைவெளி பராமரிக்கப்படுவதால், களையெடுத்தல், உரமிடல், பூச்சி மருந்து தெளித்தல் ஆகிய பணிகளை எளிதில் மேற்கொள்ள முடியும். குறைந்த வேலையாள்கள் போதும் என்பதால், நெல் சாகுபடிக்கான செலவு குறைகிறது. அத்துடன், 7 முதல் 10 நாள்களுக்கு முன்னதாகவே அறுவடைக்குத் தயாராகிவிடுகிறது. எனவே, விவசாயிகள் இந்த தொழில்நுட்பத்தையும் பின்பற்றலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை காலம்: 9,111 ரயில் பயணங்களுக்கு ஏற்பாடு

அருணாசல பிரதேசம்: ஒரேயொரு வாக்காளா் வாக்களிப்பு

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

SCROLL FOR NEXT