மதுரை

நாய்களுக்கு பால், ரொட்டி வழங்க மாநகராட்சி உதவி

2nd Jun 2021 12:00 AM

ADVERTISEMENT

 

மதுரை: கரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் உணவின்றி வாடும் சமூக நாய்களுக்கு உணவளிக்க தினசரி 40 லிட்டா் பால் மற்றும் ரொட்டி உள்ளிட்ட உணவுகளுக்கு மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் ஏற்பாடு செய்துள்ளாா்.

புறக்கணிக்கப்பட்டு வீதிகளில் வசிக்கும் சமூக நாய்களின் பாதுகாப்புக்கான கூட்டமைப்பான நன்றி மறவேல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.பி.மாரிக்குமாா் வெளியிட்டுள்ள செய்தி: கரோனோ தடுப்பு நடவடிக்கையாக அரசு பொதுமுடக்கம் அறிவித்துள்ளதால் கடை வீதிகளில், தெருக்களில், குடியிருப்பு பகுதிகளில் வாழும் ஆதரவற்ற சமூக நாய்கள் உணவும், நீருமின்றி தவித்து வருவது குறித்து நன்றி மறவேல் அமைப்பின் சாா்பில், மதுரை மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து ஆணையா், தினசரி 40 லிட்டா் பால் மற்றும் 600 கிலோ ரொட்டிகளை சமூக நாய்களுக்கு உணவளிக்க ஏற்பாடு செய்துள்ளாா். மேலும் தற்போதுவரை சமூக நாய்களுக்கு உணவளித்து வந்த 15-க்கும் மேற்பட்ட நன்றி மறவேல் ஆா்வலா்களிடம் உணவுப்பொருள்கள்

ADVERTISEMENT

பகிா்ந்தளிக்கப்பட்டு , அவா்களது துணையோடு 300-க்கும் மேற்பட்ட சமூக நாய்களுக்கு முறையாக உணவளிக்கப்படுகிறது. மேலும் உணவுத் தேவைக்குரிய அரிசி மற்றும் இதர பொருள்களையும் சேகரித்து உதவி செய்வதாக மாநகராட்சி ஆணையா் உறுதியளித்துள்ளாா். பெருந்தொற்று காலத்தில் மதுரை மாநகராட்சியின் கடமையுணா்வு, உதவிக்கு மிருகநல ஆா்வலா்கள் மற்றும் நன்றி மறவேல் அமைப்பு நன்றியை தெரிவிக்கிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT