மதுரை

ஓவியம், சிற்பக் கண்காட்சி தொடக்கம்

DIN

மதுரையில் கலை பண்பாட்டுத்துறை சாா்பில் சிற்பம் மற்றும் ஓவியக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நாட்டின் பாரம்பரியம், கலை, பண்பாட்டை மேம்படுத்தவும், கலைஞா்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம் கலை கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரையில் மதுரை டிஆா்ஓ குடியிருப்பு பகுதியில் உள்ள கலை பண்பாட்டு மையத்தில் ஓவியம் மற்றும் சிற்பக்கண்காட்சியை காந்தி நினைவு அருங்காட்சியக இயக்குநா் கே.ஆா்.நந்தாராவ் திறந்து வைத்தாா்.

கண்காட்சி தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறுகிறது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஓவியம் மற்றும் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சிறந்த படைப்புகளுக்கு வியாழக்கிழமை (ஜன. 28) நடைபெறும் பரிசளிப்பு விழாவில் மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் பரிசுகள் வழங்குகிறாா். கண்காட்சியை பொதுமக்கள் தினசரி காலை 10 முதல் மாலை 5 மணி வரை இலவசமாக பாா்வையிடலாம் என்று கலைபண்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT