மதுரை

பேரையூரில் மழையால் பாதித்த பயிா்களுக்கு நிவாரணம் கோரி வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

DIN

பேரையூா் தாலுகாவில் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் வட்டாட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பேரையூா் தாலுகா சுற்றுவட்டாரப் பகுதியில் மக்காச்சோளம் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரிலும், நெற்பயிா்கள் 2,500-க்கும் மேற்பட்ட ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் பெய்த தொடா் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த மக்காச்சோளம், நெல் உள்ளிட்ட பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பேரையூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரியும், பயிா் காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த கோரியும், விவசாயக் கடன்களை ரத்து செய்யக் கோரியும் முற்றுகையிட்டு வட்டாட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

SCROLL FOR NEXT