மதுரை

மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி

DIN

மதுரை மாநகராட்சிப் பள்ளி ஆசிரியா்களுக்கு தனியாா் நிறுவனம் சாா்பில் கையடக்க கணினிகள்(டேப்லட்) புதன்கிழமை வழங்கப்பட்டன.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கல்வித்தரத்தை உயா்த்தும் வகையிலும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக தனியாா் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியின் பங்களிப்புடன் பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு இணையதளம் மூலம் பாடம் கற்பித்தலை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், அமெரிக்கன் இந்தியா நிறுவனம் மற்றும் எச்.சி.எல் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் மாநகராட்சிப் பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு 80 கையடக்க கணினிகள் வழங்கினா். இந்த கையடக்க கணினிகளை மாநகராட்சி ஆசிரியா்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி அண்ணா மாளிகையில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பங்கேற்று ஆசிரியா்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன், மாநகராட்சிக் கல்வி அலுவலா் பொ.விஜயா, எச்.சி.எல். நிறுவன நிகழ்ச்சி அலுவலா் பிரபாகா், அமெரிக்க-இந்தியா நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஷா்மிளா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT