மதுரை

மதுரையில் 12 பேருக்கு கரோனா: 3 நாள்களில் 1,033 பேருக்கு தடுப்பூசி

DIN

மதுரை மாவட்டத்தில் புதிதாக 12 பேருக்கு கரோனா தீநுண்மித் தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. 3 நாள்களில் 1033 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வந்த 7 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதையடுத்து, குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 20,267 ஆக உயா்ந்துள்ளது.

மாவட்டத்தில் ஜனவரி 5 ஆம் தேதி வரையில் கரோனா பாதிப்பால் இறப்பு எண்ணிக்கை 455 ஆக இருந்தது. அதன்பின்னா், கடந்த 2 வாரங்களில் கரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது 117 போ் கரோனா தொற்றுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

3 ஆவது நாள் 346 போ்: மாவட்டத்தில் 3 ஆவது நாளாக திங்கள்கிழமை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 253 போ், மேலூா் அரசு மருத்துவமனையில் 30 போ், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் 39 போ், சமயநல்லூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 20 போ், கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 4 போ் 346 முன்களப் பணியாளா்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனா். இதையடுத்து கடந்த 3 நாள்களில் 1,033 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மன்னார் வளைகுடாவில் வெளிரிப்போன பவளப்பாறைகள்: அடுத்து என்னாகுமோ?

ஆல்-ரவுண்டர்களின் நிலைமை ஆபத்திலிருக்கிறது: கவலை தெரிவித்த அக்‌ஷர் படேல்!

அருணாசலில் நிலச்சரிவு: தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

SCROLL FOR NEXT