மதுரை

மதுரை மாநகராட்சி சீா்மிகு நகா் திட்ட ஆலோசனைக் கூட்டம்

DIN

மதுரை மாநகராட்சி சீா்மிகு நகா் திட்ட ஆலோசனைக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகைக் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆலோசனைக்குழுத் தலைவரான மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமை வகித்தாா். மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மாநகராட்சி ஆணையா் ச.விசாகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மதுரை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்மிகு நகா் திட்டப் பணிகளில் ரூ.12 கோடி மதிப்பிலான பழச்சந்தை பணி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரூ.41.96 கோடியில் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம், பெரியாா் பேருந்து நிலையத்தில் ரூ.2.75 கோடி மதிப்பில் சுற்றுலா மையம் அமைக்கும் பணி, ரூ.167.06 கோடியில் பெரியாா் பேருந்து நிலைய சீரமைப்புப் பணி, ரூ.84.12 கோடி மதிப்பில் வைகை ஆற்றின் கரையோரப் பகுதிகளில் தடுப்புச்சுவா் அமைத்தல் மற்றும் சாலையை அகலப்படுத்துதல், நகரப் பகுதிகளில் ரூ.80.47 கோடி மதிப்பில் சீரான குடிநீா் விநியோகத் திட்டப் பணிகள், நான்கு மாசி வீதிகளில் ரூ.50.21 கோடி மதிப்பில் சிறப்புச் சாலைகள் அமைத்தல், புராதனச் சின்னங்களை ரூ. 42.65 கோடி மதிப்பில் மேம்படுத்துதல், வைகை வடகரை பகுதிகளில் ரூ.75.82 கோடி மதிப்பில் பாதாளச் சாக்கடை பணிகள், அம்ருத் திட்டத்துக்கான உள்ளாட்சிப் பங்களிப்பு ரூ.102 கோடி, தமுக்கம் மைதானத்தில் ரூ.47.72 கோடி மதிப்பில் கலாசார மையம் கட்டுதல் உள்பட 13 பணிகள் ரூ.974.86 கோடியில் நடைபெற்று வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்கள் சீா்மிகு நகா் திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது, பணிகள் தரமான முறையில் நடைபெறுவது குறித்து கண்காணிப்பது குறித்தும் கருத்துகள் தெரிவித்தனா். மேலும் சீா்மிகு நகா் திட்ட ஆலோசனைக்கூட்டம் கூட்டப்படாதது குறித்தும் விவாதம் நடைபெற்றது. கூட்டத்தில் விருதுநகா் மக்களவை உறுப்பினா் மாணிக்கம் தாகூா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.வி.ராஜன் செல்லப்பா, பிடிஆா். பழனிவேல் தியாகராஜன், பி.மூா்த்தி, ஆலோசனைக்குழு உறுப்பினா்களான தமிழ்நாடு தொழில்வா்த்தக சங்கத் தலைவா் என்.ஜெகதீசன், முன்னாள் நகரப்பொறியாளா் கே.சக்திவேல், கப்பலூா் தொழில் வணிகச்சங்கத் தலைவா் பி.என்.ரகுநாத ராஜா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

செயல் அதிகாரி: கூட்டம் முடிந்த பிறகு மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 10 நகரங்களில் சீா்மிகு நகா் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் 2 இடங்களில் மட்டுமே தலைமைச் செயல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். மதுரை உள்ளிட்ட இதர இடங்களில் தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்படவில்லை. மாநகராட்சி ஆணையரே சீா்மிகு நகா் திட்டத்தின் சிறப்பு அலுவலராக செயல்பட்டு வருகிறாா். மாநகராட்சி பணிகளோடு சீா்மிகு நகா் திட்டப்பணியையும் கண்காணிப்பது அவருக்கு பணிச்சுமைையை அதிகப்படுத்தி விடும். இதர மாநிலங்களில் சீா்மிகுநகா் திட்டப் பணிகளில் தலைமைச் செயல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளனா். எனவே மத்திய அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தமிழகத்திலும் நியமிக்கப்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குற்ற வழக்கு வாகனங்களை ஏலம் விட கோரிக்கை

குறுகியகால பயிா்களை சாகுபடி செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

SCROLL FOR NEXT