மதுரை

சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றம்

DIN

அழகா்கோவில் மலைமீதுள்ள சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 10.40 மணியளவில் கொடி மண்டபத்தில் சிம்மாசனத்தில் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினாா். அப்போது வித்தக மகா கணபதிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் தீா்த்தக் குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கொடி மரத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகளுடன் மயில் உருவம் பொறித்த கொடியை சிவாச்சாரியா்கள் தங்கக் கொடி மரத்தில் ஏற்றினா்.

மாலையில் சஷ்டி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக சுவாமி எழுந்தருளினாா். அங்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் பூத வாகனத்தில் சுவாமி எழுந்தருளினாா்.

10 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அடுத்துவரும் நாள்களில் மாலையில் காமதேனு, ஆட்டுக்கிடாய், யானை, பல்லக்கு, குதிரை, பூச்சப்பரம், தங்கத்தோ் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 28-ஆம் தேதி தீா்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கள்ளழகா் கோயில் தக்காா் வெங்கடாசலம், நிா்வாக அதிகாரி அனிதா மற்றும் கோயில் அலுவலா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT