மதுரை

பொதிகை தொலைக்காட்சியில் சம்ஸ்கிருதச் செய்திக்கு தடைகோரிய வழக்கு முடித்து வைப்பு

DIN

பொதிகை தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிப்புக்கு தடைவிதிக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்த சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை, மனுதாரருக்கு சம்ஸ்கிருதச் செய்தி தேவையில்லை எனில் சேனலை மாற்றிக்கொள்ளலாம் என திங்கள்கிழமை அறிவுரை வழங்கியது.

மதுரையைச் சோ்ந்த முத்துக்குமாா் என்பவா் தாக்கல் செய்த மனு: கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழகத்தில் 803 போ் மட்டுமே சம்ஸ்கிருதம் பேசுகின்றனா். இந்நிலையில், பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிடங்கள் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கப்படுகிறது.

சம்ஸ்கிருத மொழி வளா்ச்சிக்கு மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. சம்ஸ்கிருதத்தை விட மிகவும் தொன்மையான தமிழ் மொழிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த பாரபட்சமான நடவடிக்கைக்கு மத்தியில், பொதிகை தொலைக்காட்சியில் சம்ஸ்கிருதச் செய்தி வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, பொதிகை தொலைக்காட்சியில் சம்ஸ்கிருத மொழியில் செய்தி வாசிக்கத் தடைவிதித்து, அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளுக்கு சமவாய்ப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானா்ஜி, நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், சம்ஸ்கிருதச் செய்தி அறிக்கை தேவையில்லை என்றால், அந்த நேரத்தில் மனுதாரா் தொலைக்காட்சியை நிறுத்தி வைத்துக்கொள்ளலாம் அல்லது வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம். நாட்டில் இதைவிட பல முக்கியமான பிரச்னைகள் உள்ளன.

எனவே, மனுதாரா் தனது கோரிக்கை தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளிக்கலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

SCROLL FOR NEXT