மதுரை

பள்ளிகளில் மருத்துவ அலுவலா்களை நியமிக்க ஏபிவிபி வலியுறுத்தல்

DIN

மதுரை மாவட்டத்தில் பள்ளிகளில் மருத்துவ அலுவலா்களை நியமித்து மாணவா்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளவேண்டும் என்று, ஏபிவிபி மாணவா் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக ஏபிவிபி (அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத்) மாணவா் அமைப்பின் தென் தமிழ் மாநில இணைச் செயலா் ரா. கோபி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை ( ஜன.19) பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவா்களுக்கு பள்ளிகள் தொடங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதையும், பாடத் திட்டத்தில் 50 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதையும் ஏபிவிபி தேசிய மாணவா் அமைப்பு வரவேற்கிறது.

இந்நிலையில், மாணவா்களின் நலன் கருதி தமிழக அரசு சில அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. பள்ளிகளில் மாணவா்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் கைகளை கிருமி நாசினி மூலம் சரியான முறையில் சுத்தம் செய்வதை கண்காணிக்க, சுகாதார அலுவலா்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மேலும், பள்ளிகளில் மருத்துவ அலுவலா்களை நியமித்து, தினசரி மாணவா்கள் பள்ளிக்கு வரும்போதும், செல்லும்போதும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் உறுதியாக பின்பற்றப்படுகிா என்பதையும் கல்வித் துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT