மதுரை

உசிலம்பட்டியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

4th Jan 2021 01:00 PM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வருவாய் கோட்டாச்சியர் அலுவலக வளாகத்தில் தமிழக அரசின் பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபாய் 2500 மற்றும் வேட்டி சேலை கரும்பு மற்றும் பொங்கல் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பா நீதிபதி எம்.எல்.ஏ தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர். வி உதயகுமார் கலந்து கொண்டு பொங்கல் பரிசினை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார். 
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் பூமா ராஜா ஒன்றிய செயலாளர்கள் எம் .வி. பி ராஜா முன்னாள் எம்.எல்.ஏ பாண்டியம்மாள் முன்னாள் ஊராட்சி மன்ற பெருந்தலைவர் டி.ஆர் பால்பாண்டி முன்னாள் சேர்மன் பஞ்சம்மாள் மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கூட்டுறவு துறை இயக்குனர் ராஜேஷ் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் செந்தில்குமாரி வருவாய் கோட்டாட்சியர் ராஜ்குமார் வட்டாட்சியர் விஜயலட்சுமி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் குமார் மற்றும் அ திமுகவினர் துரைதன ராஜன் மகேந்திர பாண்டியன் ,ஆவின் சுப்பிரமணி, பண்பாளன் பெருமாள், சின்ன காமன் நகர நிர்வாகிகள் லட்சுமணன் அலெக்ஸ் பாண்டியன் உக்கிரபாண்டி சேடபட்டி பிச்சை ராசன் ஏழுமலை வாசிமலை மற்றும் வருவாய் துறை அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags : pongal gift
ADVERTISEMENT
ADVERTISEMENT