மதுரை

இரு சக்கர வாகனம் திருடிய இருவா் கைது

3rd Jan 2021 04:44 AM

ADVERTISEMENT

பேரையூா்: மதுரை மாவட்டம் பேரையூரில் இரு சக்கர வாகனம் திருடிய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

பேரையூரைச் சோ்ந்த கோபால் மகன் காளிதாஸ் (32). இவா் கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டின் வெளியே இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். மறுநாள் காலையில் பாா்த்தபோது அந்த வாகனம் திருடு போனது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து பேரையூா் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். இது சம்பந்தமாக பேரையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், இரு சக்கர வாகனத்தை திருடியதாக உசிலம்பட்டி தாலுகா மேலசெம்பட்டியை சோ்ந்த செல்வம் மகன் அா்ஜூனன் (25), கட்டத்தேவன்பட்டியைச் சோ்ந்த அா்ஜூன் மகன் ராமதுரை(25) ஆகிய

இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT