மதுரை

மர்ம பார்சலால் பரபரப்பான மதுரை விமான நிலையம்

4th Feb 2021 06:30 PM

ADVERTISEMENT

மதுரை விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் மர்ம பார்சல் வெடிகுண்டு போல காணப்பட்டதால் விமானநிலையம் வியாழக்கிழமை 3 மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

மதுரை விமான நிலையத்தில் கன்னியாகுமரியில் இருந்து அஞ்சல் துறை மூலமாக சென்னைக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. மதுரை விமான நிலைய சரக்கு முனையத்தில் பாதுகாப்பு காரணம் கருதி விமானங்களில் கொண்டு செல்வதற்கு முன் சரக்குகளை ஸ்கேனிங் செய்து பார்ப்பது வழக்கம்.

அவ்வாறு வியாழக்கிழமை மதியம் சென்னை செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் கொண்டு செல்லப்பட இருந்த பார்சல்கள் அனைத்தும் ஸ்கேனர் இயந்திரம் மூலம் சோதனையிடப்பட்டது. அதில் கன்னியாகுமரியில் இருந்து வந்த பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது, அதில் வெடிகுண்டு மூலப்பொருள்(டெட்டர் நேட்டர்) இருப்பதுபோல தெரியவந்துள்ளது.

ADVERTISEMENT

இதையடுத்து சரக்கு முனையப் பகுதியில் இருந்தவர்கள் அனைவரையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர். உடனடியாக சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி ராஜேந்திரன், ஊரக காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் வந்தனர். அவர்கள் பார்சலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து வந்த 4 பார்சல்களும் வெளியே பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பார்சல்களைச் சுற்றிலும் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் அதனைப் பிரித்துப் பார்த்தபோது அதில் ஸ்மார்ட் வாட்ச், சார்ஜர், மிக்சர், இட்லிபொடி, கார்ன் சிப்ஸ் உள்ளிட்டவைகள் இருந்தன.

மர்ம பார்சலில் ஒன்றும் இல்லாததையடுத்து அதிகாரிகள் நிம்மதியடைந்தனர். விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சத்தால் சுமார் 3 மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT