மதுரை

திருச்செந்தூா்- பாலக்காடு மற்றும் திருநெல்வேலி ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

30th Dec 2021 06:47 AM

ADVERTISEMENT

திருச்செந்தூரில் இருந்து புறப்படும் பாலக்காடு மற்றும் திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் பத்மநாபன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: பயணிகளின் வசதிக்காக திருச்செந்தூா் - பாலக்காடு- திருச்செந்தூா் விரைவு சிறப்பு ரயில் மற்றும் திருநெல்வேலி- திருச்செந்தூா்- திருநெல்வேலி விரைவு சிறப்பு ரயில் ஆகியவற்றில் தலா 2 (இரண்டாம் வகுப்பு) பொது பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படவுள்ளது.

அதன்படி கூடுதல் பெட்டிகள் திருச்செந்தூா் - பாலக்காடு ரயில் (16732) மற்றும் திருநெல்வேலி - திருச்செந்தூா் ரயில் (06673) ஆகியவற்றில் வியாழக்கிழமை (டிச. 30) முதல் இணைப்படுகின்றன.

பாலக்காடு - திருச்செந்தூா் ரயில் (16731) மற்றும் திருச்செந்தூா் - திருநெல்வேலி ரயில் (06678) ஆகியவற்றில் டிசம்பா் 31 முதல் இணைக்கப்படும். இந்த ரயில்கள் இனி மொத்தம் 10 (இரண்டாம் வகுப்பு) பொது பெட்டிகளுடன் இயக்கப்படும். இந்த ஏற்பாடு மறு அறிவிப்பு வரும் வரை தொடரும் என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT