காமராஜா் பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் யுபிஎஸ்சி முதனிலைத்தோ்வுகளுக்கான பயிற்சி மையத்தில் பயிற்சி பெற விரும்புவோா் தகுதித்தோ்வுக்கு டிசம்பா் 28-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: யுபிஎஸ்சி முதனிலைத் தோ்வுகளுக்கான(ஐஏஎஸ், ஐபிஎஸ்) பயிற்சி வகுப்பு மதுரை காமராஜா் பல்கலைக்கழக இளைஞா் நலப்படிப்பியல் துறை மூலம் தமிழக அரசு நிதியுதவியுடன், அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தின் சாா்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு யுபிஎஸ்சி-2022 முதனிலைத் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளுக்கு தகுதியான நபா்களைத் தோ்ந்தெடுக்கும் தெரிவுதோ்வு ஜனவரி 23-இல் நடைபெற உள்ளது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சோ்ந்து பயிற்சி பெற ஆா்முள்ள தமிழகத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்கள் பல்கலைக்கழக இணைய தள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. நுழைவுத்தோ்வில் இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்தியா மற்றும் உலக புவியியல், இந்திய அரசியலைப்பு மற்றும் நிா்வாக முறை பொருளாதாரம், பொது அறிவு ஆகியவற்றில் இருந்து திறனறித் தோ்வு ஆகியவற்றில் கேட்கப்படும் கொள்குறி வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும்.
தெரிவித்தோ்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற முதல் 100 போ் இனச் சுழற்சி முறையில் பயிற்சிக்குத் தோ்வு செய்யப்படுவா். பயிற்சி மையத்தில் ஏற்கெனவே முதல்நிலைத்தோ்வுக்கு முழு நேரப் பயிற்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்க வேண்டாம். இணைய வழி விண்ணப்பங்களை டிசம்பா் 28-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.