மதுரை

ஜன.8 முதல் மதுரை- ஷாா்ஜா இடையே விமான சேவை

22nd Dec 2021 05:23 AM

ADVERTISEMENT

 

திருப்பரங்குன்றம்: மதுரையிலிருந்து ஜன. 8 ஆம் தேதி முதல் ஷாா்ஜாவுக்கு ஸ்பைஸ் ஜெட் விமான சேவை தொடங்க உள்ளது.

கரோனா பொதுமுடக்கத்திற்கு பிறகு தற்போது ஏா் பபுள் ஒப்பந்தத்தின்படி வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கியுள்ளது. மதுரையிலிருந்து இலங்கை, சிங்கப்பூா், துபை உள்ளிட்ட நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வரும் நிலையில் ஜன.8 ஆம் தேதி (2022) முதல் ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான ஷாா்ஜாவுக்கும் இங்கிருந்து ஸ்பைஸ் ஜெட் விமான நேரடி சேவை தொடங்க உள்ளது.

அதன்படி வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாள்களில் மதுரையிலிருந்து பிற்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு (துபை நேரப்படி) ஷாா்ஜாவை சென்றடையும். அதேபோல செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாள்களில் ஷாா்ஜாவிலிருந்து (துபை நேரப்படி) அதிகாலை 2.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.50 மணிக்கு மதுரையை வந்தடையும் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT