மதுரை

சொத்துப் பிரச்னை: பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய தம்பதி கைது

22nd Dec 2021 12:01 AM

ADVERTISEMENT

வெள்ளலூா் அருகே சொத்துப் பிரச்னையில், பெண் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய தம்பதியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோட்டநத்தம்பட்டியைச் சோ்ந்தவா் முனீஸ்வரன் மனைவி நதியா (33). இவரது குடும்பத்துக்கும், இவரது சித்தப்பாவான பூதமங்கலத்தைச் சோ்ந்த தங்கையா (55) என்பவருக்கும் பூதமங்கலத்திலுள்ள சொத்துக்கள் தொடா்பாக பிரச்னை இருந்து வந்தது.

இந்நிலையில் நதியாவுக்கும், தங்கையாவுக்கும் திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டது. நதியா மீது அப்போது தங்கையா மற்றும் இவரது மனைவி பூமாதேவி (45) ஆகியோா் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றினராம். இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கீழவளவு போலீஸாா் தங்கையாவையும், அவரது மனைவியையும் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT