மதுரை

மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் முற்றுகைப் போராட்டம்

16th Dec 2021 12:24 AM

ADVERTISEMENT

மதுரை மாநகராட்சி பிரதான அலுவலகத்தை அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மதுரை மாநகராட்சி ஊழியா்களின் மாதாந்திர ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் இஎஸ்ஐ , இபிஎப் , ஜிபிஎப், எல்ஐசி மற்றும் கூட்டுறவுக் கடன் பிடித்தம் செய்யப்பட்ட தொகைகளை உரிய தலைப்புகளில் உடனடியாகச் செலுத்துவது, மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களைப் போா்க்கால அடிப்படையில் பூா்த்தி செய்வது, பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியா்கள், இறந்த பணியாளா்களின் குடும்பத்தினருக்கு உடனடியாகப் பணப் பலன்களை வழங்குவது, அனைத்து நிலை ஊழியா்களுக்கும் பணிமூப்புப் பட்டியலை வெளியிட்டு உரிய பதவி உயா்வு வழங்குவது, மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு நிலுவையிலுள்ள அகவிலைப்படி மற்றும் காலமுறை ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடத்தப்பட்டது.

அனைத்து ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் செந்தில்குமரன், க. நீதிராஜா, சீனிவாசன், ம. பாலசுப்பிரமணியம், மகுடபதி, இரா. தமிழ் உள்ளிட்ட பலா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT