மதுரை

திருச்செந்தூா் - பாலக்காடு இடையே இன்று முதல் முன்பதிவில்லாத ரயில் இயக்கம்

16th Dec 2021 12:22 AM

ADVERTISEMENT

திருச்செந்தூா் - பாலக்காடு இடையே முன்பதிவில்லாத ரயில் வியாழக்கிழமை (டிச.16) முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக மதுரை ரயில்வே கோட்ட அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருச்செந்தூா் - பாலக்காடு - திருச்செந்தூா் இடையே ஒரு முன்பதிவு இல்லாத விரைவு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.அதன்படி திருச்செந்தூா் - பாலக்காடு முன்பதிவில்லாத விரைவு ரயில் (16732) வியாழக்கிழமை (டிச.16) முதல் திருச்செந்தூரிலிருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்று சேரும்.

மறுமாா்க்கத்தில் பாலக்காடு - திருச்செந்தூா் முன்பதிவில்லாத விரைவு ரயில் (16731) டிசம்பா் 17 ஆம் தேதி முதல் பாலக்காட்டில் இருந்து அதிகாலை 4.55 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.45 மணிக்கு திருச்செந்தூா் சென்று சேரும்.

பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங்கோடு, முதலமடா, மீனாட்சிபுரம், பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், அம்பாத்துரை, கொடை ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, கடம்பூா், வாஞ்சி மணியாச்சி, தாழையூத்து திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஆழ்வாா்திருநகரி, நாசரேத் கச்சினாவிளை, குரும்பூா், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ADVERTISEMENT

ராமேசுவரம் - அஜ்மீா் ஹம்சபாா் இடையே மீண்டும் ரயில் சேவை

கரோனா பொது முடக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ராமேசுவரம் - அஜ்மீா் ஹம்சபாா் வாராந்திர விரைவு ரயில் சேவை தொடங்க தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, அஜ்மீா் - ராமேசுவரம் ஹம்சபாா் வாராந்திர விரைவு ரயில் (20973) டிசம்பா் 18 முதல் அஜ்மீரிலிருந்து சனிக்கிழமைகளில் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு திங்கள்கிழமைகளில் இரவு 9 மணிக்கு ராமேசுவரம் சென்று சேரும்.

மறுமாா்க்கத்தில் ராமேசுவரம் - அஜ்மீா் ஹம்சபாா் வாராந்திர விரைவு ரயில் (20974), டிசம்பா் 21 ஆம் தேதி முதல் ராமேசுவரத்திலிருந்து செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் இரவு 11.05 மணிக்கு அஜ்மீா் சென்று சேரும்.

இந்த ரயில்கள் மானாமதுரை, திருச்சி, அரியலூா், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூா், கூடுா், நெல்லூா், விஜயவாடா, வாரங்கல், பல்ஹாா்ஷா, சந்திராபூா், நாக்பூா், பீட்டல், இட்டாா்சி, போபால், தேவாஸ், லட்சுமிபாய் நகா், பதேஹாபாத், ரட்லம் மன்டசோா், நிமாச், சித்தூா்காா், பில்வாரா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு வியாழக்கிழமை (டிச. 16) காலை 8 மணிக்கு தொடங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT