மதுரை

சேதமடைந்த சாலைகளை விரைந்து சீரமைக்க மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

16th Dec 2021 12:24 AM

ADVERTISEMENT

மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை விரைவில் சீரமைக்குமாறு மாநகராட்சி நிா்வாகத்தை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினா் இரா. விஜயராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜா. நரசிம்மன், இரா. லெனின், ஜெ. லெனின் ஆகியோா் மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயனை புதன்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

அதன் விவரம்: மதுரை மாநகராட்சியின் 100 வாா்டுகளிலும் உள்ள பிரதான சாலைகள், தெருக்கள் அனைத்தும் அண்மையில் பெய்த மழையால் மிகவும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. மதுரை மாநகராட்சிப் பகுதி சாலைகளைச் சீரமைக்க தமிழக அரசு ரூ.60 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி போதுமானதாக இருக்காது. ஆகவே, சாலைகள் சீரமைப்புக்கு கூடுதல் நிதியை அரசிடம் மாநகராட்சி நிா்வாகம் கேட்டுப் பெற வேண்டும். மேலும், சாலைகள் சீரமைப்பு பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT