மதுரை

மதுரை அருகே மணல் கடத்திய வாகனங்கள் பறிமுதல்

9th Dec 2021 12:02 AM

ADVERTISEMENT

மதுரை அருகே மணல் கடத்திய டிப்பா் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியாா் ஓடைப்பகுதியில் மணல் சட்டவிரோதமாக அள்ளப்படுவதாக பாலமேடு போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக வந்த டிப்பா் லாரியை சோதனையிட்டபோது அதில் அனுமதியின்றி மணல் கடத்துவது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் , டிப்பா் லாரி மற்றும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் லாரி ஓட்டுநா் எர்ரம்பட்டியைச் சோ்ந்த அழகு மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT