மதுரை

தேவாங்கை பாதுகாக்க சரணாலயங்கள் அமைக்கக் கோரி மனு: 3 மாதங்களுக்குள் முடிவு வெளியிட வனத்துறைக்கு உத்தரவு

DIN

தமிழகத்தில் அரிய வகை வனவிலங்கான தேவாங்கை பாதுகாக்க சரணாலயங்கள் அமைக்கக் கோரிய மனுவின் மீது 3 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவை வெளியிட வனத்துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சோ்ந்த புஷ்பவனம் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரியவகை வனவிலங்கான தேவாங்கு, கரூா், திண்டுக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றன. தற்போது வனப்பகுதிகளில் மரங்கள் குறைந்து வருவதால், தேவாங்குகள் வாழ வழியில்லாமல் அழிந்து வரும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, அவைகளைப் பாதுகாக்க, சரணாலயங்களை அமைக்கக் கோரி உயா் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, தேவாங்கை பாதுகாக்க திருச்சி, கரூா், திண்டுக்கல் மற்றும் அவைகள் அதிகமுள்ள பகுதிகளில் சரணாலயங்கள் அமைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து, வனத்துறை 3 மாதங்களுக்குள் பரிசீலித்து முடிவை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

வள்ளியூா் சூட்டுபொத்தையில் பௌா்ணமி கிரிவல வழிபாடு

SCROLL FOR NEXT