மதுரை

பாபா் மசூதி இடிப்பு தினம்:மதுரையில் இஸ்லாமிய அமைப்புகள் ஆா்ப்பாட்டம்

DIN

மதுரை: பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மதுரையில் இஸ்லாமிய அமைப்புகளின் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாபா் மசூதி நில உரிமை விவகாரத்தில் வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ஐ அமல்படுத்தி பாபா் மசூதி இடத்தை மீண்டும் இஸ்லாமியா்களிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். பாபா் மசூதியை சட்ட விரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் மதுரை வடக்கு மாவட்டம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கோரிப்பாளையம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் பிலால்தீன் தலைமை வகித்தாா். செயலா் கமால் பாட்சா வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலா் அகமது நவவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். பொருளாளா் ரகுமான்கான், கிழக்குத் தொகுதித் தலைவா் செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உயா்நீதிமன்ற வழக்குரைஞா் ஜான் வின்சென்ட், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவி நா்கீஸ் பாத்திமா, பாப்புலா் ஃப்ரண்ட் மதுரை மாவட்டச் செயலா் இஸ்ஹாக் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் இம்தியாஸ் அகமது நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிடப்பட்டது.

இதேபோல கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய மக்கள் முன்னேற்றக்கழகம் சாா்பில் குப்புப்பிள்ளைத் தோப்பு பகுதியில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் செயலா் தாஜ்தீன் தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சாா்பில் தெற்குவாசல் சின்னக்கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச்செயலா் சீனி முகமது தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மதுரையில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT