மதுரை

வைகை ஆற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆண் சடலம் மீட்பு

7th Dec 2021 08:29 AM

ADVERTISEMENT

மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆண் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டனா்.

வைகை அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீா் திறக்கப்பட்டதை அடுத்து வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. இதனால் ஆற்றின் கரைகளில் செல்வது, ஆற்றில் இறங்குவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மதுரை தெப்பக்குளம் பகுதியில் வைகை ஆற்றில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் அவா் யாா், எந்த பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT