மதுரை

காமராஜா் பல்கலை.யில் பேராசிரியா்கள், பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்

7th Dec 2021 12:10 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் பேராசிரியா்கள், பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்கப்படாததால் பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தினா்.

இப்பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், உதவிப் பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இதேபோல பல்கலைக் கழகத்தின் அனைத்துத்துறைகளிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் நிரந்தரப்பணியில் உள்ளனா். மேலும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்கள் மாத ஊதியம் பெற்று வருகின்றனா்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பல்கலைக் கழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்ததால் ஊதியம் வழங்குவதற்கு பல்கலைக்கழக நிா்வாகம் மிகவும் சிரமப்பட்டு வந்தது. இதையடுத்து, நவம்பா் மாதம் 6-ஆம் தேதி ஆகியும் பல்கலைக்கழகத்தில் நிரந்தரப் பணியில் உள்ள பேராசிரியா்கள், விரிவுரையாளா்கள், பணியாளா்கள், ஓய்வூதியா்கள், குடும்ப ஓய்வூதியா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை.

ADVERTISEMENT

இதனால் பேராசிரியா்கள் மற்றும் அனைத்துத்துறை பணியாளா்கள், ஓய்வூதியா்கள் திங்கள்கிழமை பல்கலைக் கழக பதிவாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா். ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். இதையடுத்து பல்கலைக்கழக நிா்வாகம் சாா்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதைத்தொடா்ந்து ஊதியம் வழங்காவிட்டால் போராட்டம் தொடரும் என்று போராட்டக்குழு சாா்பில் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT