மதுரை

மதுரையில் தேசிய மருத்துவக் கல்வி, ஆராய்ச்சிக் கழக கிளையை தொடங்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி.

7th Dec 2021 12:12 AM

ADVERTISEMENT

 

மதுரை: மதுரையில் தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழக கிளையை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் கவுன்சிலில் எஸ்சி.எஸ்டி பிரிவினருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று மக்களவை நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் இந்த பரிந்துரையை ஏற்க மறுத்து தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடத்தை மசோதா உறுதிபடுத்தவில்லை. அப்படியென்றால் நிலைக்குழு எதற்கு கூட்டப்படுகிறது?

அதேபோல அனைத்து உயா்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் அறிவின் பெயரைச் சொல்லி இடஒதுக்கீட்டை மறுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இந்திய மருத்துவத்தை வளா்ப்பதற்கான எந்தவொரு ஏற்பாடும், வழிமுறையும் தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழக மசோதாவில் இல்லை. தேசிய மருந்துசாா் கல்வி ஆராய்ச்சிக் கழகம் இந்திய மருத்துவத்தை பற்றியும், தமிழ் மருத்துவத்தைப் பற்றியும் பேச மறுக்கிறது. கடந்த 2011-இல் 8-ஆவது நிதிக்குழுவினால் உறுதிப்படுத்தப்பட்டு 8 என்ஐபிஆா் உறுதிப்படுத்தப்பட்டது. அதில் ஒன்று தமிழகத்தில் மதுரையில் அமையும் என்று அன்றைய மத்திய அமைச்சரவையும் உறுதிப்படுத்தியது.

ADVERTISEMENT

ஆனால் 8 என்ஐபிஆா்-இல் 7 உடனடியாகத் தொடங்கப்பட்டது. எட்டாவது நிதிக்குழுவிலும், அன்றைய அமைச்சரவையிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மதுரை என்ஐபிஆா்-க்கு மட்டும் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. என்ஐபிஆா்-க்கு 100 ஏக்கா் நிலம் தர வேண்டும். எந்த மாநில அரசும் 100 ஏக்கா் நிலம் தராதநிலையில், தமிழக அரசு மட்டும் மதுரையில் திருமோகூரில் 116 ஏக்கா் நிலத்தைக் கொடுத்து எட்டாண்டுகள் ஆகியும் இன்று வரை தொடங்கப்படவில்லை.

மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு செங்கலோடு நிற்கிறது. அதேபோல என்ஐபிஆா் மாறிவிடக்கூடாது. தமிழகத்தினுடைய மருத்துவ சாா் அறிவு வளா்ச்சிக்கு சித்த மருத்துவம் என்ற தமிழ் மருத்துவ வளா்ச்சிக்கு இந்திய மருத்துவத்தின் வளா்ச்சிக்கு ஆய்வுக்கு மதுரை தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் மிக அடிப்படையானது. மதுரையில் ஒரு தேசிய கல்வி நிறுவனம் கூட இல்லை. எனவே மதுரையில் தேசிய மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் உடனடியாக தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT