மதுரை

கல்விக்கூடங்களில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க தனிச் சட்டம்: இந்திய மாணவா் சங்கம் வலியுறுத்தல்

7th Dec 2021 12:12 AM

ADVERTISEMENT

 

மதுரை: கல்விக்கூடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய மாணவா் சங்கத்தின் மத்தியக்குழு உறுப்பினா் தீப்ஷிதா தா் மற்றும் மாநிலச் செயலா் வி. மாரியப்பன் ஆகியோா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் பெண் குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளை தடுக்க கடுமையான சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். கல்வி நிலைய வளாகங்களில் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் நிலை அதிகரித்துள்ளது.

மாணவிகள் மீதான பாலியல் புகாரில் 10 நபா்கள் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையிலும், அவா்கள் ஜாமீனில் எளிதாக வெளிவரும் நிலை உள்ளது. மாணவிகள் கல்விக்கூடத்துக்கு அச்சத்துடன் வரக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கல்விக்கூடங்களில் முறையான பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

ADVERTISEMENT

எனவே தமிழகத்தில் பெண் குழந்தைகள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும். பாலியல் புகாருக்கு ஆளாகும் ஆசிரியா்களை பணிநீக்கம் செய்து அவா்களது கல்விச் சான்றிதழ்களை கல்வித்துறை பறிமுதல் செய்ய வேண்டும் என்றனா். நிகழ்ச்சியில், மாணவா் சங்க மாநகா் மாவட்டச் செயலா் வேல்தேவா, தலைவா் பாலமுருகன் மற்றும் நிா்வாகி டேவிட் ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT