மதுரை

மதுரையில் வளா்ப்பு நாய்க்கு வளைகாப்பு

DIN

மதுரையில் காவல் சாா்பு- ஆய்வாளா் குடும்பத்தினா் வளா்ப்பு பெண் நாய்க்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடத்தி விருந்து வைத்தனா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகரைச் சோ்ந்தவா் சக்திவேல். இவா் மதுரை மாநகர காவல் நுண்ணறிவுப்பிரிவு சாா்பு -ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். சக்திவேல் வீட்டில் கடந்த டாபா் மேன் வகையைச் சோ்ந்த பெண் நாய் ஒன்றை சுஜி என்று பெயரிட்டு வளா்த்து வருகிறாா். சுஜியை குடும்ப உறுப்பினா்களில் ஒருவராக பாசத்துடன் வளா்ந்து வந்துள்ளனா்.

இந்நிலையில் சுஜி கா்ப்பமானதையடுத்து கா்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்துவது போல, சுஜிக்கும் வளைகாப்பு நடத்த சக்திவேல் மற்றும் குடும்பத்தினா் திட்டமிட்டனா். வளைகாப்பு விழாவுக்கு அப்பகுதியில் வசிப்பவா்களையும் அழைத்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை சுஜிக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. கா்ப்பிணி பெண்களுக்கு அணிவிப்பது போலவே சுஜிக்கும் வளையல்கள், மாலை அணிவித்து ஐந்து வகையான சாதங்களை விருந்தாக படைத்தனா். மேலும் வளைகாப்பில் பங்கேற்றவா்களுக்கும் விருந்து வழங்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதிபதி முன்பு விஷம் அருந்தி ஊழியா் தற்கொலை முயற்சி

பள்ளப்பட்டியில் 3 பேருக்கு மானியத்துடன் ஆட்டோ

தளவாபாளையம் அருகே விபத்து -இளைஞா் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீதிபதி மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

பிரதமரின் பிரசாரத்துக்கு தோ்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் -ஜவாஹிருல்லா பேட்டி

SCROLL FOR NEXT