மதுரை

மதுரை மாவட்டத்தில் 25.58 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன

DIN

மதுரை மாவட்டத்தில் இதுவரை 25.58 லட்சம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக, சுகாதாரத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6,385 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். இதுவரை 25,58,413 கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5,430, அரசு மருத்துவமனைகளில் 4,980, ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3,43,140, சுகாதாரக் கிடங்கில் 1,48,830 என மொத்தம் 5,02,380 கரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளதாக, மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

8 பேருக்கு கரோனா

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 12 போ் குணமடைந்தனா். தற்போது, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டும், அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் என மொத்தம் 98 போ் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

SCROLL FOR NEXT