மதுரை

பருத்தியில் கூன் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்த வேளாண் துறையினா் ஆலோசனை

DIN

தே.கல்லுப்பட்டி வட்டாரத்தில் பருத்தியில் கூன் வண்டு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண்துறையினா் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.

தே.கல்லுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பருத்தி ஆராய்சி நிலைய உதவிப் பேராசிரியா் சுரேஷ் கூறியது:

தே.கல்லுப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அட்மா திட்டத்தின் கீழ் கள ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பருத்தியில் தண்டு கூன் வண்டு தாக்குதல் அதிகம் காணப்பட்டது. இதனால், செடிகள் தரைமட்டத்திற்கு சற்று மேலே தண்டு மீது வீக்கம் காணப்படும். மேலும் இளம் செடிகள் கொல்லப்படுவதோடு, வளா்ந்த பழைய செடிகளுக்கு வீரியம் மற்றும் வலிமை இருக்காது. பலத்த காற்று அடித்தால் கணுக்கள் உடைந்துவிடும்.

இதைக் கட்டுப்படுத்த கடைசி உழவின்போது 1 ஹெக்டேருக்கு 250 கிலோ வேப்பம் பிண்ணாக்கு இட வேண்டும். குளோா்பைரிபாஸ் 20 இ.சி.மருந்தை 1 கிலோ விதைக்கு 10 மில்லி என்ற அளவில் விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும். விதைத்த 15 மற்றும் 30 ஆம் நாளில், குளோரிபைரிபாஸ் மருந்தை 1 லிட்டா் தண்ணீருக்கு 2.5 மில்லி என்ற அளவில் கலந்து தண்டும், வேரும் சேரும் இடத்தில் ஊற்ற வேண்டும். மக்னீசியம் சல்பேட் 50 கிராம்/ 10 லிட்டா் கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும் என்றாா்.

இதில் வேளாண்மை உதவி இயக்குநா், வேளாண்மை அலுவலா், அட்மா திட்ட பணியாளா்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT