மதுரை

பண்பாட்டின் அடையாளங்களாக இருப்பவை கிராமக் கோயில்கள் அமைச்சா் பி.மூா்த்தி

DIN

நமது பண்பாடு, கலாசாரத்தின் அடையாளங்களாக இருப்பவை கிராமக் கோயில்கள் என்று தமிழக வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி கூறினாா்.

மரபு இடங்களின் நண்பா்கள் அமைப்பின் மதுரை கிளை தொடக்க விழா பொன்னகரம் திரிவேணி பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதைத் தொடக்கி வைத்த அமைச்சா் பி.மூா்த்தி, பின்னா் நடைபெற்ற ‘தமிழகத்தில் அய்யனாா் வழிபாடு’ என்ற கருத்தரங்கத் தொடக்க விழாவில் பேசியது:

நமது பண்பாடும், கலாசாரமும் கிராமங்களின் வாழ்வியலோடு இணைந்தவை. கிராமக் கோயில் வழிபாட்டு முறைகள் கூட வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கின்றன. அய்யனாா், முனியாண்டி சுவாமி உள்ளிட்ட ஏராளமான கிராம தெய்வங்கள், அனைத்து சமூகத்தினராலும் குலதெய்வங்களாக வழிபடப்படுகின்றன. திமுகவினா் என்றால் கோயில்களுக்கும், வழிபாட்டிற்கும் எதிரானவா்கள் அல்ல. நான் தினமும் சுவாமி கும்பிட்டுவிட்டுத்தான் பணிக்குச் செல்கிறேன். கிராமக் கோயில்கள் வெளிப்படுத்தும் நமது பண்பாடு, கலாசாரத்தை வெளி உலகிற்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

தமிழா்களின் தொன்மையான கலாசாரத்தை, மறைக்கப்பட்ட உண்மைகளையெல்லாம் கீழடி அகழாய்வு வெளிப்படுத்தியிருக்கிறது. அதேபோல, தமிழா்களின் பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தடை வந்தபோது, உலக முழுவதும் தமிழினம் உணா்ச்சி மிக்க போராட்டத்தை நடத்தியது. தமிழினத்தின் பெருமைகளையும், நமது பாரம்பரியத்தின் அடையாளமாக இருக்கும் கிராமக் கோயில் வழிபாடு முறைகளையும் அனைத்துத் தரப்பினருக்கும் கொண்டு செல்வது பாராட்டுக்குரியது என்றாா்.

இதில், மரபு இடங்களின் நண்பா்கள் அமைப்பு தலைவா் ஷா்மிளா தேவதாஸ், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கடல்சாா் வரலாறு மற்றும் தொல்லியல் துறைத் தலைவா் வீ.செல்வக்குமாா், திருவாவடுதுறை சரஸ்வதி மகால் நூல்நிலைய அலுவலா் சு.நாராயணசாமி, விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் த.ரமேஷ் உள்ளிட்டோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT