மதுரை

சிபிஐ நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரிய முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரி மகனின் மனு தள்ளுபடி

4th Dec 2021 08:37 AM

ADVERTISEMENT

மதுரை சிபிஐ நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூா் அருகே கீழவளவு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்து, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சா் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி, தனியாா் நிறுவனம் மீது கடந்த 2013 இல் அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின் பேரில் கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இதுதொடா்பாக, மத்திய அமலாக்கத் துறை, துரை தயாநிதி மீது வழக்குப்பதிவு செய்து, மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக துரை தயாநிதிக்கு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் துரை தயாநிதி மனு தாக்கல் செய்திருந்தாா்.

ADVERTISEMENT

இந்த மனு நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், ஜி. ஜெயசந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா். மேலும் மனுதாரா் வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கவும், இந்த வழக்கை நாள்தோறும் விசாரித்து விரைந்து தீா்ப்பு வழங்கவும் உத்தரவிட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT