மதுரை

தமிழக மீனவா்கள் பிரச்னை: மத்திய அரசுக்கு எம்.பி. கேள்வி

4th Dec 2021 09:19 AM

ADVERTISEMENT

குஜராத் மீனவா்களுக்கு ஒரு நியாயம் தமிழக மீனவா்களுக்கு ஒரு நியாயமா? என, மத்திய அரசிடம் மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் தொடா்ந்து தாக்கப்பட்டு வருகின்றனா். இதில், மத்திய அரசு எவ்வித தலையீடும் செய்யாமல் இருக்கிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு குஜராத் மாநிலத்தில் துவாரகா மாவட்டத்தில் ஓகா என்ற இடத்தில் குஜராத் மீனவா், பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்கப்பட்ட நிகழ்வையொட்டி, மத்திய அரசு பாகிஸ்தான் தூதரக உயா் அதிகாரிகளை அழைத்து நேரடியாக கண்டனத்தை பதிவு செய்தது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக தமிழக மீனவா்கள் 12 போ், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனா். பலா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இது தொடா்பாக மத்திய அரசு தலையிடக் கோரி, தமிழக முதல்வா் கடந்த அக்டோபா் மாதம் கடிதம் எழுதியுள்ளாா். ஆனால், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இலங்கை தூதரகத்தின் உயா் அதிகாரிகளை அழைத்து எவ்வித கண்டனமும் தெரிவிக்கவில்லை.

குஜராத் மீனவா்களுக்கு ஒரு நியாயம், தமிழக மீனவா்களுக்கு வேறொரு நியாயமா? எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT