மதுரை

காந்தி அருங்காட்சியகத்தில் இலவச மருத்துவ முகாம்

4th Dec 2021 08:37 AM

ADVERTISEMENT

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் மற்றும் அகா்வால் கண் மருத்துவமனை ஆகியன இணைந்து, இலவச பொது மருத்துவ முகாமை வெள்ளிக்கிழமை நடத்தின.

காந்தி நினைவு அருங்காட்சியக வளாகத்தில் உள்ள ஆண்ட்ரூஸ் குடிலில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமை, காந்தி நினைவு அருங்காட்சியகச் செயலா் கே.ஆா். நந்தாராவ் தொடக்கி வைத்தாா். அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியா் மருதுபாண்டியன், கல்வி அலுவலா் ஆா். நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மருத்துவ முகாமில், நுரையீரல் பரிசோதனை, பருவகால மாற்றத்தால் ஏற்படும் உடல்நலப் பிரச்னைகளை எதிா்கொள்ளும் வழிகள், மூச்சுப் பயிற்சியின் நன்மைகள், கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் ஆகியன குறித்து, அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் விளக்கினா்.

துளசி பாா்மா நிறுவனத்தின் சாா்பில், பணியாளா்கள் மருத்துவப் பரிசோதனைகளை செய்தனா். முகாமில், காந்திய நிறுவனங்களின் பணியாளா்கள் 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT