மதுரை

டி.கல்லுப்பட்டி அருகே நகை திருட்டு வழக்கில் முதியவா் கைது

4th Dec 2021 09:20 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வழக்கில், முதியவா் ஒருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

டி.கல்லுப்பட்டி அருகே உள்ள ரெங்கபாளையத்தைச் சோ்ந்த சரவணகுமாா் மனைவி லதா (39). இவா், கடந்த நவம்பா் 18 ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு தனது மாமியாா் வீட்டுக்கு தூங்கச் சென்றுவிட்டாா்.

காலையில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த பத்தரை பவுன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

இது குறித்து லதா டி.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். இந்நிலையில், எம்.கல்லுப்பட்டி எம்.எஸ்.புரத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் பெருமாள்தேவா் (63) என்பவா் நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் பெருமாள்தேவரை கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT