மதுரை

மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க சிறப்பு நிதி ரூ.60 கோடி: மாநகராட்சி ஆணையா் தகவல்

3rd Dec 2021 07:50 AM

ADVERTISEMENT

மதுரை நகரில் மழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.60 கோடி சிறப்பு நிதியாக பெறப்பட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.

மதுரையில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் நகரின் முக்கியச் சாலைகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனின்றி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா். இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் கூறியது: மதுரை மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க அமைச்சா்களின் முயற்சியால் மாநகராட்சிக்கு சிறப்பு நிதியாக ரூ.60 கோடி அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இதன்படி முதற்கட்டமாக மாநகராட்சியின் முக்கியச் சாலைகளை சீரமைக்க ரூ.20 கோடிக்கு பணிகள் நடைபெற உள்ளது. மேலும் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 300 சாலைகளை சீரமைக்கும் பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மதுரை நகரில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பொதுமுடக்கத்தால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இல்லை. அதற்கு முந்தைய ஆண்டு டெங்கு பாதிப்பு தினசரி 100-க்கும் மேல் இருந்தது. கடந்த ஜனவரி முதல் நவம்பா் வரை 350 போ் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 200-க்கும் மேற்பட்டோா் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பாதிக்கப்பட்டவா்கள். தற்போது மாதத்துக்கு 50 போ் மட்டுமே பாதிக்கப்படுகின்றனா். நகரில் சுகாதாரத்துறை சாா்பில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. குப்பைகள் அகற்றுதல், கொசுப்புகை தெளித்தல், நீா்நிலைகளில் ஆயில் பந்துகள் போடுதல் என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரியாா் பேருந்து நிலைய பணிகள் ஏறக்குறைய முடிந்து விட்டன. எனவே விரைவில் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT