மதுரை

சேதமடைந்த 336 பள்ளிக்கட்டடங்களை இடிக்க உத்தரவு: ஆட்சியா்

3rd Dec 2021 07:56 AM

ADVERTISEMENT

மதுரை மாவட்டத்தில் சேதமடைந்து பயன்படுத்த முடியாத 336 பள்ளி மற்றும் அங்கன்வாடிக் கட்டடங்களை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் அறிவுறுத்தியுள்ளாா்.

அரசுப் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் உள்ள கட்டடங்களின் ஸ்திரத் தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டிருந்தாா். ஊரக வளா்ச்சித் துறையின் பராமரிப்பில் இருக்கும் 654 ஆரம்பப் பள்ளிகள், 190 நடுநிலைப் பள்ளிகள், 1311 அங்கன்வாடி மையங்களில் உள்ள 4,264 கட்டடங்களின் நிலை குறித்து ஊரக வளா்ச்சித்துறை பொறியியல் பிரிவு அலுவலா்கள் ஆய்வு செய்தனா். இதில் 3,265 கட்டடங்கள் நல்ல நிலையில் இருப்பதும், 663 கட்டடங்களில் சிறு பழுதுகள் பாா்க்க வேண்டிய நிலையிலும், 336 கட்டடங்கள் பயன்படுத்த இயலாத நிலையில் இருப்பதும் கண்டறியப்பட்டது.

இதன்படி, பள்ளிக் கட்டடங்கள் நிலை குறித்து ஆட்சியா் எஸ்.அனீஷ்சேகா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். சேதமடைந்த கட்டடங்களை உடனடியாகப் பழுதுநீக்கம் செய்யவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தவும், தேவைப்படும் பள்ளிகளில் புதிய கழிப்பறைகள் கட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். மேலும், பள்ளிகளில் உள்ள

கழிப்பறைகளை முறையாகச் சுத்தம் செய்து சுகாதாரமாகப் பராமரிக்கவும் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT