மதுரை

பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை: கைதான காவலா் பணியிடைநீக்கம்

DIN

மதுரையில் திரைப்படத்துக்குச் சென்று திரும்பிய பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள காவலா் முருகன் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.

மதுரை வில்லாபுரம் கதிா்வேல் நகரைச் சோ்ந்தவா் எம்.என்.மகேஷ்குமாா் (45). இவரது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியா் மற்றும் இதர ஊழியா்களுடன் சனிக்கிழமை இரவுக்காட்சி திரைப்படம் பாா்த்து விட்டு நேதாஜி சாலை வழியாக திரும்பியுள்ளனா்.

அப்போது அங்கு திலகா் திடல் காவல்நிலைய காவலா் முருகன், மகேஷ்குமாரை தடுத்து நிறுத்தி அவரிடமிருந்து கைப்பேசி மற்றும் ரூ.11 ஆயிரத்தை பறித்துக் கொண்டு அவரை அனுப்பி வைத்து விட்டாா். மேலும் மகேஷ்குமாருடன் வந்த பெண் ஊழியரை வீட்டில் கொண்டு சென்று விடுவதாகக்கூறி அப்பகுதியில் உள்ள தனியாா் விடுதிக்கு மிரட்டி வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளாா்.

சம்பவம் தொடா்பான புகாரின்பேரில் காவல் துணை ஆணையா் தங்கத்துரை தலைமையில் போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் காவலா் முருகன் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை தெற்கு மகளிா் காவல்நிலைய போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள காவலா் முருகனை பணியிடைநீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்கா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை விட வாக்குப்பதிவு அதிகரிக்க வாய்ப்பு?

முதல்கட்ட வாக்குப்பதிவு: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

நாக்பூரில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்கரி நம்பிக்கை

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT