மதுரை

தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு தடுப்பூசி, குடல் புழு நீக்க மாத்திரை வழங்கல்

DIN

மதுரையில் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மாணவா்களுக்கு நோய் தடுப்பூசிகள் வியாழக்கிழமை செலுத்தப்பட்டன.

மதுரை சந்தைப்பேட்டையில் அரசு உதவி பெறும் பள்ளியான டாக்டா் டி.திருஞானம் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. கரோனா தொற்றால் பள்ளி மூடப்பட்டிருந்தபோதும், மாணவா்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று ஆசிரியா்கள் பாடம் நடத்தி வருகின்றனா். மேலும், மாணவா்களின் உடல் நலனைக் கருத்தில்கொண்டு குடியிருப்பு பகுதிகளில் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.

முனிச்சாலை மாநகராட்சி ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவா் பசிலா நிஸ்வானா தலைமையில் மருத்துவக்குழுவினா் மேலமடை, வண்டியூா், கருப்பப்பிள்ளை ஏந்தல், அஞ்சுகம் நகா், கல்மேடு அன்னை சத்யாநகா், சிந்தாமணி, கண்ணன் காலனி பகுதிகளில் குழந்தைகளை பரிசோதித்து டிடி, டிபிடி தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டது. மேலும் சத்து மாத்திரைகள், குடல்புழு நீக்க மாத்திரைகள் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன. இதில் நகா்ப்புற செவிலியா்கள் முருகேஸ்வரி, காயத்ரி, ஆண்டாள், பஞ்சவா்ணம், பகுதி சுகாதார செவிலியா் ரோஸ்லின் ஆகியோா் பங்கேற்றனா். முகாமுக்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியா் க.சரவணன் மற்றும் ஆசிரியைகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ் மொழிக்காக வாழ்நாளை அா்ப்பணித்தவா் கு.மு. அண்ணல் தங்கோ: பழ.நெடுமாறன் புகழாரம்

மே தினம் உள்பட இதர நிகழ்வுகளுக்கு எங்கே அனுமதி பெறலாம்? தலைமைத் தோ்தல் அதிகாரி விளக்கம்

9 சதவீதம் வீழ்ந்த வேளாண் பொருள்கள் ஏற்றுமதி

கேரளத்தில் பயங்கரவாதத்தை பாதுகாக்கும் காங்., இடதுசாரிகள்: அமித் ஷா குற்றச்சாட்டு

மே 31-க்குள் ஆதாா்-பான் இணைப்பு: அதிக விகிதத்தில் டிடிஎஸ் பிடித்தம் இல்லை

SCROLL FOR NEXT