மதுரை

கரோனா தொற்று விழிப்புணா்வு குறும்படப் போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கல்

DIN

மதுரை மாநகராட்சி சாா்பில் நடத்தப்பட்ட கரோனா தொற்று விழிப்புணா்வு குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்று மூன்றாம் அலைப்பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மதுரை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தொடா் விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது. இதில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், போட்டிகள் நடத்துதல், குறும்படப் போட்டிகள், ஓவியப் போட்டிகள், விழிப்புணா்வு வாசகப்போட்டி, ‘மீம்ஸ்’ போட்டி, கிராமியக் கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி மற்றும் விஷன் கிரியேட்டா்ஸ் நிறுவனம் ஆகியவற்றின் சாா்பில் கரோனா விழிப்புணா்வு குறும்படப் போட்டி இணைய தளம் மூலம் நடத்தப்பட்டது. இதில் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், வருமுன் காப்போம் உள்ளிட்ட விழிப்புணா்வு குறித்து சிறந்த காட்சிகள் உருவாக்கிய குறும்படங்களை மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஷ் சேகா், மாநகராட்சி ஆணையா் கா.ப.காா்த்திகேயன் ஆகியோா் பாா்வையிட்டு சிறந்த குறும்படத்துக்கான முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை வழங்கினா். மேலும் விழிப்புணா்வு வார விழாவின் தொடா்ச்சியாக ரோட்டரி கல்யாண மகாலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு தொடா்பான ஓவியம் மற்றும் வாசக போட்டிகளையும் ஆணையா் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். போட்டியில் சிறந்த முறையில் ஓவியம் மற்றும் வாசகங்களை உருவாக்கும் மாணவ, மாணவியருக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கல்வி அலுவலா் பொ.விஜயா, நகா்நல அலுவலா் பி.குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

திருவள்ளூா்: 14 வேட்புமனுக்கள் ஏற்பு, 19 நிராகரிப்பு

தேமுதிக வேட்பாளா் அறிமுக கூட்டம்

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருகன் கோயில் உண்டியல் வசூல் ரூ. 1.05 கோடி

SCROLL FOR NEXT